
“ஹபீபி” திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள்:-
கஸ்தூரி ராஜா,
மாளவிகா மனோஜ் ஈஷா,தனாஸ்ரீ அனுஸ்ரேயா
ராஜான்,ஜெயஸ்ரீ, பினுராஜ், அருள் குமார், ரேகா குமனன், இஸ்மத் பானு, பலர்
கய்சன்,சன்சாகுல், மாஸ்டர் தீகன்,
தீக்ஷாஸ்ரீ மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர்:-
மீரா கதிரவன்
மியூசிக்:-
சாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு :-
மகேஷ் முத்துசாமி.
படத்தொகுப்பு
மதி.வி.எஸ்
கலை இயக்குனர்:-
அப்புனிசஜன்.
இந்த நெசவுத் தொழிலை நம்பியிருக்கும் தென் தமிழக குடும்பத்தின் இரண்டாம்
தலைமுறை குடும்ப தலைவரான கஸ்தூரிராஜா,
நெசவுத் தொழில் நலிவடைந்து வருவதால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்.
இதனால், அவரது தம்பி வேலைக்காக அரபு நாட்டுக்கு செல்கிறார். தம்பி வெளிநாட்டில்
வேலை செய்தாலும், கடைசி வரை நெசவுத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தில்
மட்டும் தான் வாழ வேண்டும் என்பதில் கஸ்தூரிராஜா உறுதியாக இருக்கிறார்.
இதற்கிடையே அவரது மகன் ஈஷா 12-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைகிறார். அவரையும்
வெளிநாட்டுக்கு அனுப்ப உறவினர்கள் முயற்சிக்கிறார்கள்.
ஆனால், வெளிநாட்டுக்கு சென்று விட்டால் தனது பள்ளி காதலி மாளவிகா
மனோஜை சந்திக்க முடியாமல் போய்விடும் என்பதால், குடும்பத்தை பிரிய மனம் வர இல்லாமல் கஸ்தூரிராஜாவின் மகன் ஈஷா
வெளிநாட்டுக்கு போகாமல் தனது சொந்த ஊரிலே
கிடைக்கும் ஏதோ வேலையை செய்து கொண்டிருக்கிறார்.
நவீன இயந்திரங்களின் வருகையால்
கைத்தறி நெசவுத் தொழில் பாதிப்படைய, கஸ்தூரிராஜ
பொருளாதார ரீதியாக கஷ்ட்டப்படுகிறார்.
அவரது கஷ்ட்டத்தை போக்க மகனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப உறவினர்கள்
வற்புறுத்துகிறார்கள்குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் இருக்கும்
சித்தப்பாவின் நிலையை நினைத்து தானும் அப்படி ஒரு
வலியை அனுபவிக்க கூடாது என்பதில் ஈஷா உறுதியாக இருக்கிறார்.
இதற்கிடையில், தன் காதலை மாளவிகாவிடம் சொல்வதற்காக
இரவு நேரத்தில் அவரது இல்லத்திற்கு செல்லும் போது ஈஷா, அந்த ஊரில் பொதுமக்களிடம் மாட்டிக் கொள்கிறார்.
அதன் பிறகு ஈஷாவின் வாழ்க்கையில் மட்டும் இல்லாமல்,
அவரது குடும்பத்தில் பல மாற்றங்கள் நடகிறது. அவை
என்ன ? அதன் மூலம் அந்த குடும்பம் எதிர்கொள்ளும் வலி
ஆகியவற்றை உணர்வுப்பூர்வ
மாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும்
சொல்வது தான் ‘ஹபீபி’. இஸ்லாமிய வாழ்வியலாக சொல்வது தான் கதைக்களம்.
முகமது யூசுப் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கஸ்தூரி ராஜா,
பல்வேறு உணர்வுகளை கனகச்சிதமாக வெளிப்படுத்தி
நடிப்பில் தான் ராஜா என்பதை நிரூபித்திருக்கிறார்.
ஒரு குடும்ப தலைவராக குடும்பத்தின் மீதான அக்கறை, தான்
நேசிக்கிற நெசவுத் தொழில் புதைக்கப்படும் போது
வெளிப்படுத்தும் ஏமாற்றுபவர்கள், தனது மகனின் இப்ப இருக்கிற நிலையை கண்டு கதறி
அழுவதும், என்ற அனைத்து இடங்களிலும்
அளவான நடிப்பில் வெளிப்படுத்தி தன்
கதாபாத்திரத்திற்கும்திரைக்கதைக்கும் பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.
இளம் நாயகனாக நடித்திருக்கிறார் அறிமுக நடிகர் ஈஷா, குழந்தைத்தனமான முகம் மற்றும்
புன்னகையுடன் கவனத்தை ஈர்க்கிறார். மனதுக்குள் வளர்க்கும் காதல்,
அதை சொல்ல தடுமாறுவது என்று பள்ளி பருவத்திலும், காதல் பருவத்திலும்
எதார்த்தமான நடித்திருக்கிறார், தன் வாழ்க்கையின்
அடுத்தக்கட்ட என்ன என்பதை நகர்வதில் இறுக்கமான முகத்தோடு
இருப்பினும், காட்சிகளை உணர்வுப்பூர்வமாக கையாண்டு
முதிர்ச்சியான நடிப்பின் மூலம் கைதட்டல் பெறுகிறார்.
முக்காடுக்குள் முகத்தை மறைத்துக் கொண்டு வலம் வரும் மாளவிகா
மானோஜுக்கு படம் முழுவதும் வசனம் இல்லை என்றாலும், இறுதிக் காட்சியில் அவர் பேசும் அந்த
ஒரு சில வசனங்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களின் ஒட்டுமொத்த வலியையும்
பார்வையாளர்
களிடம் கடத்தி சென்று விடு
கின்றன.
கட்டுப்பாடுகளுக்கும்அடக்குமுறைகளு
க்கும் ஆளாகிறார் இஸ்லாமிய பெண்களில்
பெண்ணியம் பேசுபவர்களும், தங்களது உரிமைக்காகவும்,
சுயமரியாதைக்காகவும் போராடுபவர்களும் உண்டு என்பதை
உணர்த்தும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்
தனாஸ்ரீ பொருத்தமான தேர்வு.
அனுஸ்ரேயா ராஜான், ஜெயஸ்ரீ பினுராஜ், அருள் குமார், ரேகா குமனன், இஸ்மத்
பானு, மலர் கய்சன், சன் சாகுல், மாஸ்டர் தீகன், தீக்ஷா ஸ்ரீ ஆகியோர்
கதாபாத்திரங்களு
க்கு பொறுத்தமான தேர்வாக பயணித்திருக்கிறார்கள்.
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு 80-களில் ஆரம்பிக்கும்
கதையை 90, 2000 மற்றும் தற்போதைய காலக்கட்டம் என்று பார்வையாளர்களை
கதைக்களத்துடன் பயணிக்க வைத்திருப்பது இயற்கையுடன் இணைந்து வாழும்
வாழ்வியலை கண்டு மனதை ஏங்க வைக்கின்றன.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையான
மெலோடியாக பயணிக்கின்றது. இஸ்லாமிய பாடல்கள்
கதைக்களத்தையும், கதை மாந்தர்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில்
பயணித்த இருக்கின்றன. பின்னணி இசை கதைப் போல்
எந்தவித பதற்றமும், பரபரப்பும் இல்லாமல் அதிகம் சத்தமில்லாமல்
பயணித்து காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்
கிறது.
80-காலக்கட்டத்தில் இருக்கிற வீடுகள், இஸ்லாமிய வழிபாட்டு தளங்கள், மக்களின் ஆடை
ஆகியவற்றை மிக நுணுக்கமாக கையாண்டுள்ள கலை இயக்குநர்
அப்புனி சஜன், ஒவ்வொரு காலக்கட்டத்தின் மாற்றங்களையும்
மிக தத்ரூபமாக திரையில் வெளிக்காட்டி கவனம் ஈர்த்திருக்கிறார்.
உணர்வுப்பூர்வமான கதை என்றாலும் பல காட்சிகள் சற்று
நீளமாக இருப்பதை படத்தொகுப்பாளர் மதி.வி.எஸ் தவிர்த்திருக்கலாம்.
இஸ்லாமியர்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை மக்களிடம்
அழுத்தமாக பதிய வைப்பதற்கான முயற்சியாக
இருப்பினும், அதை பல காட்சிகளில் கையாண்டிருப்பது
திரைக்கதையின் வேகத்தை குறைத்து விடுகிறது.
தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத இஸ்லாமியர்களின் வாழ்வியலையும்,
அவர்களது கலாச்சாரம் மற்றும் அவர்களுக்குள் இருக்கும் பொருளாதா ஏற்றம்,
இறக்கங்களை உண்மைக்கு நெருக்கமாக தன் கதையில்
பேசியிருக்கும் வி.எஸ்.முகமது அமீன், வெளிநாட்டு வேலை மூலம் பெரும்
பொருளாதாரம் ஈட்டினாலும், அதற்கான அவர்களது இழப்பீடு என்பது திரும்ப பெற
முடியாத ஒன்று, என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் மீரா கதிரவன், மூன்று
தலைமுறையை கடந்த ஒரு குடும்பத்தின்
வாழ்க்கை சூழலை காட்சி மொழியில் மிக இயல்பாக கொடுத்திருக்கிறார்.
இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல், அவர்களது நட்பு, காதல், எதிர்பார்ப்பு
ஆகியவற்றை மிக சரியான முறையில் பேசியிருந்தாலும், பொருளாதாரம்
ஈட்டுவதற்காக குடும்பத்தை பிரிந்து செல்லும் அவர்களது வலி,
அவர்களுக்கான மட்டும் அல்ல, குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில்
இருக்கும் அனைவருக்குமானது என்பதையும் புரிய வைத்திருக்கிறார்.
வசனங்கள் மூலம் பலரது வலியை பார்வையாளர்
களிடம் நடத்தியிருக்கிறார் இயக்குநர் மீரா
கதிரவன், வழக்கமான திரைக்கதை
பாணியில் கதை சொன்னாலும், மக்களிடம் தான் கொண்டு சேர்க்க
நினைத்ததை மிக சரியாக செய்திருக்கிறார்.
இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு இந்த படம் ஒரு புதிய அனுபவத்தை கொடுப்பது போல்,
இஸ்லாமியர்களுக்கு அவர்களது வாழ்வியலை
இந்த திரைப்படத்தை பார்த்து பெரும் திருப்தியை கொடுக்கிற
படம் பார்த்தத்தில், ’ஹபீபி’ அன்புக்குரியவர்களு
க்கு மற்றும் இல்லை முஸ்லிம் சமூகத்தில் நடந்த உண்மையான
வாழ்வியல் எடுத்திருக்கிறார் இயக்குனருக்கு அனைவரும் பாராட்டவேண்டும்
சிறந்த குடும்ப படம். ஹபீபி அனைவரும் திரையரங்குகளில் கண்டு களியலாம்.