
“ஆட்டி”
திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள்:-
இசக்கி கார் வண்ணன், அபிநட்சத்திரா, பிரவீன் பழனிசாமி, செல்வகுமார்,காதல்
சுகுமார், கரண் சக்கரவர்த்தி செளந்தர், குயிலி நாச்சியார்,உதயா சுமதி, நிலா சுமித்ரா தேவி,ஆஷினா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர்:-
கிட்டு.
மியூசிக்:-
தீசன்
ஒளிப்பதிவு:-
சிபி.சதாசிவம்
படத்தொகுப்பு:-
சி.எம்.இளங்கோவன்.
கலை இயக்குனர்:-
முஜீபுர் ரகுமான்.
150 ஆண்டு கால
ஊட்டி, மதுரை,கொடை
கானல்,எடக்காடு,
பழங்குடியினர் மக்களின் உண்மை சம்பவத்தை தொட்டு 1970-ல் களில் கதை நடக்கின்றன.மலைவாழகிராம் தேயிலை
தோட்டங்கள் நிறைந்த மலை கிராமத்தில் உள்ள
தமிழினம் பெண்களின் வீரவரலாறு அநீதி க்கு போராடும் ஆக்ரோஷமான பெண்கள்.
காவல்
நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராக வரும் நாயகன்
இசக்கி கார்வண்ணனுக்கு, அந்த காவல் நிலையத்தில்
எந்தவித குற்ற வழக்குகளும் பதிவாகாமல்
இருப்பது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.
இதற்கிடையே, அந்த ஊருக்கு ஆசிரியராக வருகிறார் பிரவீன்
பழனிசாமி, மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.
அந்த கொலை வழக்கை விசாரிக்கிறார். இசக்கி கார் வண்ணன், அந்த
அந்த ஊர் பற்றிய பல திடுக்கிடும் தகவல்களை கிடைகின்றன.
அதை அறிந்துக் கொள்வதுடன்,
முகமூடி அணிந்த ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று, பலரை
கொடூரமாக கொலை செய்வதையும் கண்டுபிடிக்கிறார்.
அவர்கள் யார் ?, எதற்காக இப்படி கொலை
செய்கிறார்கள் ?, ஆசிரியர் கொலைக்கும்
அவர்களுக்கும் என்ன தொடர்பு இருக்கின்றதா ?
ஆகிய கேள்விகளுக்கு சரியான பதில்களை
சஸ்பென்ஸ் த்ரில்லராக சொல்வது தான்‘ஆட்டி’.
கதையின் கதைக்களம்.
நாயகனாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில்
நடித்திருக்கிறார் இசக்கி கார்வண்ணன், கம்பீரமான
தோற்றம், கூர்மையான பார்வை, தெளிவான
சிந்தனை ஆகியவற்றின் மூலம் தன்
கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
நாயகன் என்றாலும் தனக்கான முக்கியத்துவத்தை குறைத்துக் கொண்டு
திரைக்கதைக்கு முக்கியத்துவம் அளித்து படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.
அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அபி நட்சத்திரா, தன் முதிர்ச்சியான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார்.
அவரது அறிமுகம் மற்றும் அவருக்கான பில்டப் ஆகியவை பெரும் எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி, அவரது கதாபாத்திர
வடிவமைப்பு மற்றும் அவற்றுக்கான குறைவான
முக்கியத்துவம் பெரும் ஏமாற்றமளிக்
கின்றன.
ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பிரவீன் பழனிசாமிக்கு சிறிய வேலை இருந்தாலும்
அதை நிறைவாக செய்து திரைக்கதையில்
பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறார்.
காவலராக நடித்திருக்கிறார். செல்வகுமார், காதல்
சுகுமார், கரண் சக்கரவர்த்தி, சவுந்தர் உள்ளிட்ட
மற்ற வேடங்களில் நடித்திருக்கிறார்கள் நடிகர், நடிகைகள் அனைவரும் தங்களது
வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு இயற்கையின் அழகையும், அங்கு
நிறைந்திருக்கிறது ஆபத்தையும் மிக நேர்த்தியாக பதிவு செய்திருப்பதுடன்,
1970 ஆண்டு காலக்கட்டத்தில் பயணிக்கின்றது அனுபவத்தை படம்
பார்ப்பவர்களுக்கு ஏற்பட வைத்திருக்கிறார்.
தீசனின் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருப்ப
துடன், மலைப்பகுதியில்
நிலவும் ஓசைகளை துள்ளியமாக கொடுத்து கவனம் ஈர்க்கிறது.
படத்தொகுப்பு சி.எம்.இளங்கோவன் திருப்பங்கள் நிறைந்த
திரைக்கதையை யூகிக்க முடியாதபடி காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
முஜீபிர் ரஹ்மானின் கலை இயக்கம், கதாபாத்திரங்களின் ஆடை வடிவமைப்பு,
1970- ஆண்டு காலக்கட்டத்தின் கட்டிடங்கள் என அனைத்தும்
படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கின்றன.
மர்மங்கள் நிறைந்த சூழலுடன், எதிர்பார்க்காத வகையில் திருப்பங்களுடன்
முதல் பாதி பயணித்தாலும், இரண்டாம் பாதியில் பெண்களுக்கு
எதிராக நடக்கிற குற்றங்கள், அதற்கான தீர்வு
என்று படம் அதிரடி தளத்திற்கு மாறுகின்றன.
திருமுருகனின் திரைக்கதை வேகமாகவும்,
விறுவிறுப்பாகவும் பயணித்தாலும், அந்தக் காலம் முதலே பெண்களுக்கு
எதிராக நடந்த கொடூரங்களை வரலாற்று ரீதியாக விளக்கவும் செய்திருக்கின்றன.
ஒரு மர்ம கொலையில் தொடங்கும் கதையை, பல
சுவாரஸ்யமான அம்சங்களுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர்
பெண்களுக்கு எதிராக நடக்கிற அநீதிகளை எதிர்த்து போராடும் பெண்கள்
படை என்று
நினைவுப்படுத்துகிற வகையில் சுவாரஸ்யமான காட்சிகள் மூலம்
பார்வையாளர்களை திருப்திப்படுத்தியிருக்கிறார்.
படம் பார்த்தத்தில், “ஆட்டி”அதிரடி அமைதிபடை .