பிரைம் வீடியோ வெளியிட்ட தலைவெட்டியான் பாளையம் என்ற சீரிஸின் அழகான டிரெய்லர் கடந்த மாதம் வெளியானது, இதற்குப் பிறகு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மிக அதிகமாக உருவாகியுள்ளது. முன், ஜி.பி. முத்து மற்றும் அபிஷேக் குமாரின் நடிப்பில், இந்த சீரிஸின் கதாப்பாத்திரங்களை தொடர்பாக அட்டகாசமான புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஜி.பி. முத்து, அபிஷேக் குமாருக்கு தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங்காக மாறுவதற்கான ஐந்து அற்புதமான ஐடியாக்களை வழங்குகிறார்.
ஜி.பி. முத்து மற்றும் அபிஷேக் குமாரின் இடையிலான உரையாடலில் வழங்கிய ஐந்துக் குறிப்புகள்:
இந்த விதிகளைச் சரியாக பின்பற்றினால், தலைவெட்டியான் பாளையத்தின் விசித்திரமான கிராமவாசிகளுக்கு பிடித்தவனாக மாற முடியும். முத்துவின் இந்த அறிவுரைகளை பின்பற்றி, அபிஷேக்கின் கதாபாத்திரமான சித்தார்த் வெற்றியை அடைந்தால் எப்படி?
தலைவெட்டியான் பாளையம் என்பது எட்டு எபிசோடுகள் கொண்ட காமெடி சீரிஸாக அமைந்துள்ளது. இது, பெரிய நகரத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன், தலைவெட்டியான் பாளையம் என்ற தொலைதூர கிராமத்தில் தனது புதிய பணியில், அறிமுகமில்லாத சூழலின் சவால்களை எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதை விவரிக்கிறது. இயக்குநர் நாகா இயக்கியுள்ள இந்த சீரிஸை, பாலகுமாரன் முருகேசன் தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். இந்த குடும்ப பொழுதுபோக்கு சீரிஸில், திறமையான நடிகர்களான அபிஷேக் குமார், சேத்தன் கடம்பி, தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சாமி மற்றும் பால் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரைம் வீடியோவில் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் தலைவெட்டியான் பாளையம் பிரீமியர் செய்யப்படுகிறது, தமிழ் மற்றும் ஆங்கில சப்டைட்டுகளுடன்.
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.