நடித்தவர்கள் :- குமரன் தங்கராஜ், பாயல் ராதாகிருஷ்ணன், ஜி.எம்.குமார்,
பால் சரவணன்,
வினோத் முன்னா, குமரவேல், வினோத்
சாகர், சிவாஆனந்த், மற்றும் பலர் நடித்துள்ளனர்...
டைரக்டர் :- பாலாஜி வேணுகோபால்.
மியூசிக் :-
அச்சு ராஜாமணி
ஒளிப்பதிவு :-
ஜெகதீஷ்
சுந்தரமூர்த்தி.
திரைப்பட இயக்குநராக ஆக வேண்டும் என்ற கனவு எண்ணத்தோடு பயணிக்கிறார் நாயகன்.
குமரன் தியாகராஜன், வீட்டில் அண்ணனின் மரணம்.
நடந்துவிடுகிறது. அந்த மரணம் கொலையாக
இருக்கலாம்னு சந்தேகிக்கும் வகையில் காவல்துறையினர் சந்தேகப்படுகிறார்
கள்.
அந்த சந்தேகம் நாயகன் குமரன் தியாகராஜன் மேல் விழுகிறது.
தான் இயக்குநராக ஆகவேண்டிய சமயத்தில் இந்த விஷயம் தன் மீது
விழும் பழியில் இருந்து எப்படி தப்பிக்க முயற்சிக்கிறார்.
நாயகன், அதற்கு என்ன மேற்கொண்டு நடவடிக்கைகளில், அவரது சினிமா
கனவு பலித்ததா? இல்லையா ? என்பதை சொல்வது தான்
'குமார சம்பவம்"
நாயகனாக நடித்துள்ளார். குமரன் தியாகராஜன்,
அனைத்து உணர்வுகளையும் திறம்பட கையாண்டிருக்கிறார்
கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருப்பதுடன், அனைத்து விதமான உணர்வுகளையும்
மிக தெளிவாக நடிப்பில் வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.
நல்ல கதைகளை தேர்வு செய்து வந்தால் நிச்சயம் வெற்றி தமிழ்
சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகனாக வலம் வரலாம். என்பது உறுதி.
நாயகியாக நடித்துள்ளார் .பாயல் ராதாகிருஷ்ணா அவருக்கு கதையில்
குறைந்த வேலை இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.
கதையின் மையமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .
குமரவேல், அவர் வழக்கமான தனது இயல்பான நடிப்பின் மூலம்
கதாபாத்திரத்துடன் படத்திற்கும் பலம் சேர்த்துள்ளார்.
நாயகனின் நண்பராக வருகின்ற பாலசரவணன்,மாமாவாக வருகின்ற வினோத்
முன்னா, தாத்தாவாக நடித்துள்ளார் ஜி.எம்.குமார்,சிபிஐ அதிகாரி வினோத்
சாகர், காவல்துறை அதிகாரி சிவா ஆனந்த் என மற்றும் பல வேடங்களில் நடித்திருப்பவர்கள்
தங்களது வேடத்திற்கு ஏற்ப கனகச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.
அச்சு ராஜாமணியின் இசையில் பாடல்கள் எல்லாம் கேட்கும்படி இருக்கிறது.
பின்னணி இசை
காட்சிகள் மற்றும் கதபாத்திரங்களின் உணர்வுகளுக்கு ஏற்ப பயணிக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின்
ஒளிப்பதிவில் காட்சிகள் கதைக்களத்தின்
தன்மையை கண்களுக்கு குளிர்ச்சியை தரும் விதத்தில் சேர்க்கின்றன.
எழுதி இயக்கியுள்ளார். பாலாஜி வேணுகோபால்,
சந்தர்ப்பம் அமைந்தால் சாமன்யனும்
சரித்திரத்தில் ஒர் இடம் பிடிக்கும் வகையில் செயல்பாட்டில் அவன்வருவான்,
என்பதை திரைத்துறையில்
பயணிக்கும் ஒருவரை வைத்து படத்தில் சொல்லியிருக்கிறார்.
முழுக்க முழுக்க நகைச்சுவையாக படம் நகர்வதால், சில இடங்களில்
பார்வையாளர்களை சிந்திக்கவும் வைத்து, தான் சொல்ல
வந்ததை விஷயத்தை திறம்பட சொல்லி வெற்றி
பெற்றிருக்கிறார் இயக்குநர் பாலாஜி வேணுகோபால்.
படம் பார்த்தத்தில், "குமார சம்பவம்" பெரிய சம்பவம் பகுதி பகுதியாக
குடும்பத்தில் நடக்கின்ற நாடக பாணியில் எடுத்திருக்கிறார். இருப்பினும் புதிய
விஷயங்களை புகுத்தி ஆசிரியர் பற்றி சின்னச் சின்ன கதைகளில் நாயகன் பற்றி
சொல்வது போல் வருகிறது.என்றாலும், அனைவரும் பார்த்து கண்டு களியலாம்...
Kami menggunakan cookie untuk menganalisis lalu lintas situs web dan mengoptimalkan pengalaman situs web Anda. Dengan menerima penggunaan cookie, data Anda akan dikumpulkan bersama data pengguna lainnya.