சமுத்திரக்கனி, பாரதிராஜா, தம்பிராமையா, நாசர், கருணாகரன், ஶ்ரீமன், இளவரசு, சாம்ஸ், சந்துரு, அனன்யா, ரேஷ்மா, வடிவுக்கரசி ஆகியோர் நடித்துள்ள “திரு. மாணிக்கம்” திரைப்படம், நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் பின்னணி இசையை பிரபல இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் அமைத்துள்ளார்.
விஷால் சந்திரசேகர், நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களைப் பயன்படுத்தி, ஹங்கேரியின் புத்தா பெஸ்ட் நகரில் இரவு பகல் எவ்விதக் தாமதமும் இல்லாமல் இசையமைப்பினை முழுமையாக்கியுள்ளார். இதன் விளைவாக, இந்த இசை இணையத்தில் வைரலாகி, பார்வையாளர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரு. மாணிக்கம் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தை ஜி.பி. ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபால் கிருஷ்ணரெட்டி மற்றும் ராஜா செந்தில் தயாரித்துள்ளனர். படம் பற்றிய வைரல் வீடியோவைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.