
சென்னையில் மெரினா மால், அம்பா ஸ்கைஒன்னில் பர்த்ரைட் பை ரெயின்போ ஹாஸ்பிடல்ஸ் சார்பில்
அன்னையர் தினம் கொண்டாட்டம்
1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பங்கேற்பு

சென்னை, மே 12 2026: ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் பெண்கள் நலம், மகப்பேறு மற்றும் கருத்தரிப்பு சிகிச்சை பிரிவான பர்த்ரைட் பை ரெயின்போ ஹாஸ்பிடல்ஸ், சென்னை முழுவதும் அன்னையர் தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடியது. இதில் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள், தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் ஒன்றிணைந்து மகிழ்ச்சியையும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர். மெரினா மால் மற்றும் அம்பா ஸ்கைஒன்னில் போன்ற முக்கிய இடங்களில் இந்தக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
இந்த இரண்டு இடங்களிலும் நேரலை இசை, உடனுக்குடன் புகைப்படம் எடுக்கும் பூத்கள், குடும்பத்தினருக்கான விளையாட்டுகள் மற்றும் பெற்றோர், குழந்தைகளுக்கான சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில் பங்கேற்ற தாய்மார்கள் தங்கள் அன்றாட வேலைகளில் இருந்து விலகி மகிழ்ச்சியாக இருப்பதற்கான ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக இருந்தது என்று கூறினர். சோழிங்கநல்லூர் மற்றும் அண்ணா நகர் பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்கள் ஒன்றாக இணைந்து, தாய்மை என்பதை ஒரு தனிப்பட்ட நிகழ்வாக மட்டுமின்றி, கணவர், குழந்தைகள் மற்றும் குடும்ப உறவினர்கள் என அனைவரும் இணைந்து கொண்டாடும் ஒரு கூட்டு அனுபவமாக மாற்றினர்.
இந்த நிகழ்ச்சி குறித்து சென்னை பர்த்ரைட் பை ரெயின்போ ஹாஸ்பிடல்ஸ் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ ஆலோசகர் டாக்டர். நிவேதிதா கூறுகையில், “தாய்மை என்பது பெரும்பாலும் சில முக்கிய கட்டங்களில் மட்டுமே கொண்டாடப்படுகிறது. கருத்தரிப்பு, கர்ப்ப காலம், குழந்தை பிறப்பு மற்றும் குழந்தையை வளர்க்கும் ஆரம்பக்கட்டம் என அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உறுதுணையாக இருப்பதே பர்த்ரைட்டின் நோக்கமாகும். இந்த அன்னையர் தினக் கொண்டாட்டங்கள், மருத்துவமனையைத் தாண்டி குடும்பங்கள் ஒன்றாக இணைந்து தாய்மையைக் கொண்டாடுவதற்கும், தங்கள் உறவினர்களுடன் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்குவதற்குமாக நடத்தப்பட்டது” என்று கூறினார்.
இது குறித்து சென்னை ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் கிளஸ்டர் ஹெட் குணசேகர் சி. கூறுகையில், “பர்த்ரைட் பை ரெயின்போ ஹாஸ்பிடல்சில், சிறப்பான மருத்துவ சேவையைத் தாண்டி நாங்கள் சேவை செய்யும் குடும்பங்களுக்கு இடையே ஒரு நல்லுறவை உருவாக்குவதும் எங்கள் கடமை என நம்புகிறோம். சோழிங்கநல்லூர் மற்றும் அண்ணா நகரில் ஒரே நேரத்தில் நடைபெற்ற கொண்டாட்டங்கள், இந்த நிகழ்வை சென்னை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் கொண்டு செல்ல உதவியது. நிகழ்ச்சி நடைபெற இடங்களில் குடும்பங்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டது, எங்கள் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. மேலும் எங்களின் அர்ப்பணிப்புமிக்க மருத்துவ சேவையையும் இது உறுதிப்படுத்துகிறது,” என்றார்.
பர்த்ரைட் பை ரெயின்போ ஹாஸ்பிடல்ஸ், சாதாரண மற்றும் சிக்கலான மகப்பேறு சிகிச்சைகள், பல்நோக்கு கரு வளர்ச்சிக்கான சிகிச்சைகள், மரபணு மற்றும் கருத்தரிப்பு சேவைகள், மற்றும் மகளிர் மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. அன்னையர் தினத்தில் குடும்பங்கள் ஒன்றாக இணைந்து தாய்மையை கொண்டாடுவதற்கான சிறந்த சூழலை இது உருவாக்கியது. இந்தப் பகுதிகளில் வசிக்கும் பல குடும்பங்கள் இந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.