நடித்தவர்கள் :- கல்யாணி பிரியதர்ஷன்,
நஸ்லென், சந்து சலீம்குமார், அருண் குரியன், மாஸ்டர் சாண்டி, மற்றும் பலர் நடித்துள்ளனர்...
இயக்கம்: டொமினிக் அருண்.
இசை: ஜேக்ஸ் பிஜாய்.
ஒளிப்பதிவு :- நிமிஷ் ரவி .
படத்தொகுப்பு :- சாமன் சாக்கோ.
கலை இயக்குனர் பங்கலான்.
ஸ்டண்ட் இயக்குனர்:- யானிக் பென்னி.
தயாரிப்பு: வேஃபேரர் பிலிம்ஸ் -
மாயா அதீத சக்திகள் கொண்ட நாயகி கல்யாணி
பிரியதர்ஷன் பெங்களூர் நகரத்திற்குள்
வருகிறார். அங்கே பேக்கரி ஒன்றில் பணியாற்றும் நண்பர்கள் அவர்கள் தங்கியிருக்கும்.
அடிக்குமாடி அபார்ட்மெண்ட் குடியிருப்பில் சந்திரா வீட்டில் இருக்கும்
எதிரே வாசிக்கிறார்கள் நஸ்லன்,
சந்து சலீம்குமார், மற்றும் அருண்
குரியன், ஆகியோர் குடியிருப்பில் தங்கி இருக்கிறார்கள்.
ஆனால் எதிரே மாடியில் இருக்கும் சந்திரா அவரால் ஈர்க்கப்படுகிறார்கள். அதே சமயம்,
மனிதர்களை கடத்தி அவர்களது உடல் உள்ள உறுப்புகளை திருடும் கும்பலால்
பெங்களூரில் பரபரப்பு ஏற்படுகிறது. அந்த கும்பலுடன்
தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டரான சாண்டியுடன்,
கல்யாணி பிரியர்தர்ஷனுடன் அடிக்கடி மோதல் வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால்,
கல்யாணி பிரியர்தஷன் அவள் அதீத மாயா சக்திகள் கொண்ட
பெண் மட்டும் அல்ல, டிராகுலா ஆங்கிலம் படத்தில் வரும் ரத்தக்கட்டேரி போல
இந்த படத்தில் ரத்ததை உரிஞ்சும் ஹிட்பேய் போன்ற
கதாபாத்திரத்தில் வருகின்ற அதற்கும் மேல என்ற உண்மை தெரிய
வருகின்றன. அவர் யார் ? அவரைப் பற்றிய உண்மை
தெரிந்த பிறகு என்ன நடந்தது ? என்பதை நம்ம புராணக் கதைக் கதாபாத்திரத்தை
சூப்பர் ஹீரோவாக சித்தரிக்கும் வகையில் சொல்வது
தான் ’லோகா - அத்தியாயம் ஒன்று : சந்திரா’.என்ற கதைக்களம்.
சந்திரா என்ற கதாபாத்திரத்தில் மாயா அதீத சக்திகள் படைத்த பெண்ணாக
கல்யாணி பிரியதர்ஷன் வெகுவாக மிரட்டியுள்ளார். குறிப்பாக
சண்டைக்காட்சியில்
அனைவரும் மிரளும் வகையில் அசத்திருக்கிறார்.
அதிகமாக பேசிக்ககூடியக் காட்சிகூட
இல்லை என்றாலும், தனது அளவான உடல் அசைவுகளில் மூலம்
சூப்பர் ஹீரோயின் கதாபாத்திரத்தில் மிக கனகச்சிதமாக
பொருத்தமாக அமைந்துள்ளது. தனது
கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் கொண்டாடும் வகையில் நடித்திருக்கிறார்.
சந்திராவால் கவர்ந்து ஈர்க்கும் வகையில இளைஞர்களாக நடித்திருக்கிறார் .
நஸ்லன், சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் ஆகியோர் மூலம் கதை
நகர்ந்து வருகின்றன, அவர்களது உரையாடல் மற்றும் உடல் மொழி
ஆகியவை பல இடங்களில் சிரிக்கவும் வைக்கிறது.
குறிப்பாக, சந்திராவை பின் தொடர்ந்து, அவர் யார் ? என்பதை அறிய முடிகிறது.
நேரில் பார்க்கும் நஸ்லனின் நடிப்பு சிரிக்க. வைக்கின்றன.
போலீஸ் இன்ஸ்பெக்டர் நாச்சியப்பா கவுடா என்ற
கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடன இயக்குநர்
சாண்டி மாஸ்டரின் வில்லத்தனம் மிரள வைக்கின்றன.
சிறப்பு தோற்றத்தில் வரும் டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் மற்றும்
திரையில் தோன்றாத பெரியவர் கதாபாத்திரங்கள் எதிர்பார்ப்பை
தூண்டும் விதத்தில் திரைக்கதையில் கையாளப்பட்டுள்ளன
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையை,
கேட்கும் அளவுக்கு இருக்கிறது.
ஒளிப்பதிவாளர்
நிமிஷ் ரவியின்
அவரின் கேமரா
கோணங்கள் மற்றும் வண்ணங்கள் படத்தை
பிரமாண்டம் மற்றும்
தரமானதாக கொடுத்திருக்கிறார்.
கலை இயக்குநர் பங்கலானின் பணி,
சிறப்பாக அமைந்துள்ளது.
சண்டைப்பயிற்சி இயக்குநர் யானிக் பென்னின்
சண்டைக்காட்சிகள், வி.எஃப்.எக்ஸ்
காட்சிகள் என அனைத்து மிக தரமானதாக இருக்கின்றன.
படத்தின் துவக்கத்தில் என்ன நடக்கிறது, என்பது
கொஞ்சம் புரியாதபடி இருப்பதால் சந்திரா யார் ? என்பதை மிக
தெளிவாக சொல்லி, சூப்பர் மேன் உலகம், அதுல இருக்கும்
மாயா அதீத சக்தி படைத்தவர்கள், என்று படத்தில்
ஏகப்பட்ட விஷயங்கள் இருப்பதால்,
அனைத்தையும் சுருக்கமாக சொல்லி படத்தின் சுவாரஸ்யத்தை
அதிகரிக்கச் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சாமன் சாக்கோ.
தென்னிந்திய சினிமாவில் சூப்பர் மேன் ஜானர் திரைப்படங்கள் என்பது அரிதானது
என்பதாலும், அப்படிப்பட்ட படங்களை மக்கள்
மனதில் பதிய வைப்பது என்பது
மிகப்பெரிய சவால். அந்த சவாலை இயக்குநர்
டொமினிக் அருண் மிக சிறப்பாக கையாண்டுள்ளார்.
நம் புராணக் கதைகளில் உள்ள கதாபாத்திரத்தை
மாயா அதீத சக்தி படைத்த சூப்பர் மேனாக சித்தரித்து, அதன் மூலம் ஒரு மிகப்பெரிய சூப்பர்
மேன் உலகத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர்
டொமினிக் அருண், சந்திரா என்ற முதல் அத்தியாயத்தை மிக சிறப்பாக கையாண்டுள்ளார்.
குறிப்பாக சந்திராவின் சின்னவயது பாதிப்பு, அங்கிருந்து அவர்
மாயா அதீத சக்தி படைத்த பெண்ணாக உருவெடுப்பது, அவரது அடுத்தடுத்த
பயணங்களில் ஆகியவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
அனைவரையும் ரசிக்க வைக்கும் விதத்தில் இருக்கின்றன.
சந்திரா கதாபாத்திரத்தின் அறிமுகம் மற்றும்
அவரது நிஜ முகத்தை வெளிப்படுத்தும் காட்சிகள்
அனைத்தும், சூப்பர் மேன் கதாபாத்திரத்தை கொண்டாடும்
வகையில் மட்டும் , பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்கினறன. ஆனால்,
இவை அனைத்தும் முதல்பாதியில் மட்டும் தான்.
இரண்டாம் பாதியில் சூப்பர் மேன் உலகத்தின் விரிவாக்கம், மற்றும்
அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கு சூப்பர் ஹீரோக்கள் எப்படி இருப்பார்கள், என்பதற்கு
அறிமுகமாக இருந்தாலும், கதை
வேறு வழியில் பயணிப்பது போல் இருக்கின்றன.
சந்திரா எதற்காக பெங்களூருக்கு வருகிறார் ?
அவருக்கு கொடுக்கப்பட்ட பணி என்ன ?, அவர்கள் யாருக்கு எதிராக
போராடுகிறார்கள் ? ஆகிய கேள்விகளுக்கான
பதில்கள் தெளிவாக தெரியவில்லை என்பதால்
பரவாயில்லை, அதற்கான பக்கம் எதுவும் கொடுக்காமல், வேறு சூப்பர்
ஹீரோக்களின் அறிமுகத்துடன் படத்தை
முடித்திருப்பது திரைக்கதையில் முடிவுகள் என்னவென்று செய்யவில்லை.
படம் பார்த்தத்தில், '
லோகா - அத்தியாயம் -ஒன்று சந்திரா"வின் சூப்பர் வரலாற்றை
ரசிகர்களுக்கு சொல்லியிருக்கிறார்
திகில்,கிரைம், திரில்லர்,சஸ்பென்ஸ்போன்ற ஜானரில்
வந்துள்ளது. அனைவரும் கண்டிப்பாக பார்த்து கண்டுகளிக்கலாம்...
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.