“டபுள் ஆக்குபன்ஸி”
திரைப்பட விமர்சனம்…
“டபுள் ஆக்குபன்ஸி”
(Double Occupancy)

போஸ் வெங்கட் –
வினோதினி தம்பதிக்கு திருமணமாகி பல வருடங்களுக்குப்

பிறகு குழந்தை பிறக்கின்றன குழந்தை பிறந்த சில நிமிடங்களில் மூச்சு

இல்லாமல் இருக்க, அவர் குழந்தையை பார்த்து கடவுளிடம் போஸ் வெங்கட் கடவுளிடம் கதறி அழகிறார்.

அப்போது வானத்தில் இருந்து வெளியான ஒரு பெரிய வெளிச்சம் மூலம் குழந்தையின்

நின்ற மூச்சு திரும்ப கிடைக்கின்றன.

அதே சமயம் ஒரு அதிசயமும் நிகழ்கின்றன. பிறக்கும் போது

ஆணாக இருந்த குழந்தை, அந்த சூரிய வெளிச்சம் பட்ட பிறகு பெண்

குழந்தையாக மாறிவிடுகிறது. அது மட்டும் இல்லாமல், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை

பெண்ணாகவும், மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரை ஆணாகவும் மாறுகிற அதிசயமும் நடக்கின்றன.

இந்த உலகத்தில் எங்கும் நிகழாத இந்த அதிசய குழந்தைகளை

அழைத்துக் கொண்டு வேறு ஊருக்கு சென்று விடும் போஸ் வெங்கட் –

வினோதினி தம்பதி விபத்து ஒன்றில் இறந்து விட, இந்த அதிசய பிறவிகள் சென்னைக்கு வந்து விடுகிறார்கள்.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாமலும், ஒருவரது செயல்கள் மற்றவரின் நினைவில் நிற்காமலும்

இருக்கும் இவர்களது இந்த மாற்றம் மட்டும் தினம் தினம் அரங்கேற, பகல்

முழுவதும் ரேஷ்மா வெங்கடேஷாக இருப்பவர், இரவு

சந்தோஷாக மாறிவிடுவார். இந்த விசித்திரமான‌ பிறவியில்

இவர்களது வாழ்க்கையில் காதல் மலர்கின்றன.

ரேஷ்மா வெங்கடேஷை வினோத் கிஷன் காதலிக்க, சந்தோஷை சம்யுக்தா விஸ்வநாதன் காதலிக்கிறார்.

இவர்களது விசித்திரமான வாழ்க்கை இவர்களது காதலில்

பல சிக்கல்களை உருவாக்க, அதே சமயம் இவர்களது அதிசய பிறப்பை வியாபரமாக்கி

பணம் சம்பாதிக்க மரபணு ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று முயற்சிக்கிறது.

இவற்றில் இருந்து தப்பித்து இவர்கள் இருவரும் காதலில் ஜெயித்தார்களா ?,

இவர்களது இந்த அதிசய வாழ்க்கை முடிவுக்கு வந்ததா ? இல்லையா?என்பதை

வித்தியாசமான முயற்சியாக இளைஞர்களை குஷிப்படுத்தும்

விதமாகவும் சொல்வது தான் “டபுள் ஆக்குபன்ஸி”. திரைப்பட கதைக்களம்.

நாயகனாக நடித்திருக்கிறார். அறிமுக நடிகர் சந்தோஷ், நடிகருக்கான

அனைத்து கலைகளையும் கற்றுத்தேர்ந்தவராக இருக்கிறார்.

ஆக்‌ஷன், நடனம், காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை, வசன உச்சரிப்பு என அனைத்து
ஏரியாவிலும்

எந்தவித பதற்றமும் இல்லாமல் விளையாடியிருப்
பவர் தன்னை

முழுமையான ஹீரோ மெட்டிரியலாக நிரூபித்திருக்கிறார்.

சந்தோஷின் காதலியாக நடித்திருக்கும் சக்யுக்தா

விஸ்வநாதன், நவீன ஆடையில் அழகாக வலம் வருவதோடு, காதல் காட்சிகளிலும்,

பாடல் காட்சிகளிலும் கவர்ச்சியில் ஜொலிக்கிறார்.

இரவை பார்க்காத பெண் உருவமாக நடித்திருக்கிறார் ரேஷ்மா வெங்கடேஷ்,

அழுத்தமான கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.

மாலை 6 மணிக்குள் வெளியில் நடமாட முடியாத தனது வாழ்க்கை சூழலையும், சராசரி பெண்ணாக வாழ

வேண்டும் என்ற தனது ஏக்கத்தையும் தனது கண்களின் மூலமாக வெளிப்படுத்தும்

ரேஷ்மா, தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

ரேஷ்மா வெங்கடேஷின் காதலராக நடித்திருக்கிறார் வினோத் கிஷான், மிரட்டும் தன் கண்களை

கண்ணாடி போட்டு மறைத்து காதலையும், காமெடியையும்

வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார்.
விடிவி கணேஷ் புடவை அணிந்து

பெண்ணாக நினைத்து நடனம் ஆடும் அந்த ஒரு காட்சியை தவிர

அவரது அனைத்து காட்சிகளும் சிரிக்க வைக்கிறார்.

பகவதி பெருமாள், விச்சு விஸ்வநாத், போஸ் வெங்கட், வினோதினி

ஆகியோரின் திரை இருப்பும், அவர்களது அனுபவம் வாய்ந்த நடிப்பும்

திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சாந்தகுமார் சக்கரவர்த்தி படம் முழுவதையும்

கலர்புல்லாகவும், பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகம். பின்னணி இசை அளவு.

பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பு கதைக்கருவையும், அதன்

லாஜிக்குகளை பார்வையாளர்
களுக்கு தெளிவாக புரிய வைத்திருப்பது எந்தவித குழப்பமும்

இல்லாமல் கதையை நகர்த்திச் சென்றிருக்கின்றன.

எழுதி இயக்கியிருக்கிறார் அஸ்வின் கந்தசுவாமி, ஒரு இதயம் இரண்டு

உருவம், என்ற வித்தியாசமான கதைக்கருவை தனது

சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் பார்வையாளர்கள்

ஏற்றுக்கொண்டு கொண்டாட வைத்திருக்கிறார்.

ஃபேண்டஸி ஜானர் கதை என்றாலும் அதை அறிவியுடன்

தொடர்புபடுத்தி எழுதப்பட்ட காட்சிகள், அதை

புரிய வைத்த விதம், மக்கள் மனதில் எழும் கேள்விகளுக்கான

பதில்களை ஒரு கதாபாத்திரம் மூலம் சொன்னது, என முதல் பாதி

லாஜிக்குடன், நகைச்சுவையுடன் பயணித்து பார்வையாளர்களை கவர்ந்து விடுகிறார் கள்.

அதே சமயம், முதல் பாதியில் இருந்த துள்ளல் மற்றும்

சிரிப்பு சத்தம் இரண்டாம் பாதியில் இல்லாமல் போனது

படத்திற்கு கொஞ்சம் பலவீனம் இருந்தாலும், ஒருவரை ஒருவர்

பார்த்துக் கொள்ள முடியாத மற்றும் உணர்வுகளை

பகிர்ந்துக் கொள்ள முடியாத வித்தியாசமான இரட்டையர்களின்

உணர்வுகள் மூலம் அந்த பலவீனத்தையும்
பலமாக்கிவிடுகிறார்

இயக்குநர் அஸ்வின் கந்தசுவாமி.

நம்ப முடியாத விஷயம் தான், ஆனால் இத்தகைய

அதிசயங்களை சினிமா என்ற மாபெரும் ஊடகத்தின் மூலம் சொல்வது,

இத்தகைய நம்ப முடியாத கற்பனைகளுக்கு உயிர் கொடுக்கவும்

முடியும். அந்த வகையில், புதுமைகளை

விரும்புகிறவர்களுக்கும், இளசுகளுக்கும் இந்த படம் நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும்.

படம் பார்த்தத்தில், ‘டபுள் ஆக்குபன்ஸி’ மக்களை

மகிழ்விக்கும் புதிய .
கிரக சேர்க்கையில் பரிநாமத்தில் தோன்றிய இளம் காதல் ஜோடிகள்

சிந்திக்க வைக்கும். கிரகத்தில்தோன்றிய‌ விச்சித்திரமான காதலர்கள் .

கதைக்களம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

By Rajesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *