“ரெட் லேபில்” திரைப்பட விமர்சனம்

நடித்தவர்கள்:- லெனின், அஸ்மின், ஆர்.வி. உதயகுமார்,

முனிஷ்காந்த், அனு மோகன்.மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர்:- கே.ஆர். வினோத்.

மியூசிக் : –
கைலாஸ் மேனன்.

ஒளிப்பதிவு:-
சதீஷ் மெய்யப்பன்.

படத்தொகுப்பு:-
லாரன்ஸ் கிஷோர்.

தயாரிப்பாளர்கள்:- ரெவ்ஜென் ஃபிலிம் ஃபேக்டரி – லெனின்.

கல்லூரி காலத்தில் அடிதடி, போலீஸ் வழக்கு என்று

இருந்த கதநாயகன் லெனின், கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு

அனைத்தையும் விட்டுவிட்டு, தொழில், காதல், என்று அமைதியாக வாழ்ந்து வரும் நிலையில், மீண்டும்

தனது கல்லூரியில் நடைபெறும் மாணவர்கள்

தலைவர் தேர்தலில் பயணிக்க வேண்டிய சூழ்நிலைக்கு வருகிறார்.

அடிதடியை எல்லா விட்டு அமைதி முறையில் வாழவேண்டிய வேண்டும் என்ற

முடிவுடன் மீண்டும் கல்லூரிக்குள் வரும் லெனின், கல்லூரி

வளாகத்திற்குள் வைத்து ஒருவரை கொலை செய்து விடுகிறார்.

அதனால் ஏற்கனவே இருந்த குற்ற வழக்குகள் இருக்கிற நிலையில், கொலை

குற்றத்தில் மாட்டிக் கொண்டால் தனது எதிர்காலம் கெட்டுவிடும் என்பதால்,

இந்த குற்றத்தில் இருந்து விடுவிக்க, தனது காதலியை

அந்த கல்லூரி மாணவியுடன் சேர்ந்து ஒரு உதவியை ஒரு திட்டம் போடுகிறார்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்டவரை தேடி கல்லூரி வளாகத்திற்குள் போலீஸ்

வருவதுடன், அவரது ஆட்களும் தேட தொடங்குகிறார்கள்.

இவர்களை தாண்டி லெனின் தனது திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி

தப்பித்தாரா?, இல்லையா அவர் யாரை, எதற்காக

கொலை செய்தார்? என்பதை பரபரப்பாக சொல்வது தான் “ரெட் லேபில்” திரைப்பட கதைக்களம்.

கதாநாயகனாக நடித்திருக்கும்

லெனின், அறிமுக இல்லாத நடிகர் என்ற அடையாளம் தெரியாமல் சிறப்பாக
நடித்திருக்கிறார்.

புதிய மாணவர் மற்றும் கல்லூரியை முடித்த காலக்கட்டம் என்று

தோற்றத்தில், நடிப்பிலும்
வேறுபாட்டுடன் அந்த அதிகம்

மெனக்கெட்டிருப்பது திரையில் தெரிகின்றன.

கதாநாயகிக்கு ஏற்ற தோற்றம் இல்லை என்றாலும் அளவான நடிப்பு மூலம் தனது

பணியை நிறைவாக செய்திருக்கிறார் அஸ்மின்,

திரைக்கதையில் முக்கியத்துவதுடன் .பயணித்து, கடைசியில்‌ ரசிகர்கள் மனதில் கனமாக இடம் பிடித்து விடுகிறார்.

காமெடி கலந்த வில்லத்தனத்தின் மூலம் கவனம்

ஈர்க்கிறார் இயக்குநர்
ஆர்.வி.உதய
குமாரின் திரை கவனத்தை படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கின்றன.

முனீஷ்காந்த், அனுமோகன் ஆகியோர் வரும்

காட்சிகளில் இருப்பினும் படத்திற்கு அடையாளமாக பயணித்திருக்கிறார்கள்.

குறிப்பிட்ட ஒரு லொக்கேஷனில் கதை நகர்ந்து போனாலும் வெவ்வேறு

கோணங்கள் மூலம் காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கச்

செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பன்.

கைலாஷ் மேனின் இசையில் பாடல்களும்,

பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், அனைத்து

அம்சங்களையும் அளவாக கொடுத்து, படத்தை வேகமாகவும்,

விறுவிறுப்பாகவும் நகர்த்திச் சென்றிருக்கிறார்.

கல்லூரி வாழ்க்கை மற்றும் காதல் பின்னணியில்,

கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையை

மிக நேர்த்தியாக எழுதிருக்கும் பொன்.பார்த்திபன்,

பல திருப்பங்கள் மூலம் இறுதி வரை சுவாரஸ்யம்

குறையாமல் திரைக்கதையை கையாண்டிருக்
கிறார்.

ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டில், புதுமுகங்களை வைத்துக்கொண்டு,

எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குநர் கே.ஆர்.வினோத்,

கொலை குற்றத்தில் இருந்து தப்பிப்பதற்காக நாயகன்

மேற்கொள்ளும் திட்டம் தொடர்பான

காட்சிகளை பார்க்க வைத்திருக்கிறார்.

ஒரு கல்லூரிக்குள் கதை நடந்தாலும், காட்சிகளின்

வடிவமைப்பின்
மூலம் வெவ்வேறு கோணத்தில்

படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குநர் கே.ஆர்.வினோத்,

எதிர்பார்க்காத திருப்பங்கள் மூலம் இரண்டாம் பாதி

முழுவதையும் மிகவும் சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்று,

பார்வையாளர்
களுக்கு ஒரு நல்ல திரைப்படத்தை

பார்த்த அனுபவத்தை கொடுக்கிறார்.

படம் பார்த்தத்தில், “ரெட் லேபில்” இந்த படத்தை தரமானதாக அமைத்திருக்கிறார் இயக்குனர். இந்த திரைப்படத்தை‌

திரையரங்குகளில் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.

By Rajesh