இசையமைப்பாளர்
சங்கீத ராஜன்
காலமானார்!
நடிகர் தியாகராஜன் எழுதி இயக்கிய “பூவுக்குள் பூகம்பம்” படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான எஸ்.பி. வெங்கடேஷ் என்கிற சங்கீத ராஜன் இன்று (3.2.2026) காலை காலமானார் அவருக்கு வயது 70.


சேலம் விஷ்ணு, காவல் பூனைகள், வடக்குவாசல், என் கணவர், ஏர்போர்ட், சினேகிதி, முனி முதல் பாகம் , பாட்டாளி மகன் உட்பட தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஒரியா, போஜ்புரி மற்றும் மலையாளம் உட்பட 1500 படங்களுக்கு மேல் இசையமைத்தவர் சங்கீதராஜன், மலையாள படத்திற்காக கேரள அரசின் விருதும் பெற்றவர் இவர். 5 000 பாடல்களுக்கு மேல் இசையமைத்தவர். நிறைய திரைப்படங்களுக்கு பின்னணி இசையமைத்து முதன்மையில் உள்ளவரும் இவர் தான்.
இவருக்கு கோபால், சுகுமார் என்ற இருமகன்கள் உள்ளனர். இவர்களும் இசையமைப்பாளர்களாக உள்ளனர். திருமணமான ஒரு மகளும் உள்ளார்.
ஒரு வருடமாக நுரையீரல் பிரச்சனையால் வலம் வந்த இவர் இன்று காலை அவரது வீட்டில் காலமானார்.
அவரது உடல் அடக்கம்
நாளை மதியம் 1.00 மணி அளவில் போரூர் மயானத்தில் நடைபெறுகிறது.
திரை உலகினரின்
அஞ்சலிக்காக கீழ்கண்ட அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது.
2/ 82 சக்தி சாய்ராம் தெரு,
கணபதி நகர், ஆலப்பாக்கம்
(ராஜேஷ் ஸ்கூல் அருகில்)
சென்னை 600111