


“விஸ்வநாத் அன்ட் சன்ஸ்”
திரைப்பட விமர்சனம்…
நடத்தவர்கள்:-
சூர்யா, மம்தா பைஜூ, ராதிகா, சுனில் ரெட்டி,நாசர், ராஜிவ்மேனன்,
மேம்கோபி, காளிவெங்கட்,
பாவனிஸ்ரீ,
ரவீனாடாணாடன்,
மற்றும் பலர் நடித்ததுள்ளனர்கள்
டைரக்டர் :-
வெங்கி அட்லூரி
மியூசிக் :-
ஜி.வி.பிரகாஷ் குமார்.
ஒளிப்பதிவு :-
நிமிஷ் ரவி.
படத்தொகுப்பு:-
நவீன் நூலி
தயாரிப்பாளர்கள்
சித்தராஎனடர்டனடெயின் மேனட்ஸ்.
நாற்பது ஆகியும் கல்யாணம் பண்ணாமல் இருக்கிறார்.
நம்ம குடும்பத்தில் ஒரு வாரிசு வரணும் நீ சீக்கிரமா கல்யாணம் பண்ணவேண்டும்
என்று அம்மா தினமும் தொந்தரவு செய்வார். அதற்காக
அமெரிக்கா சென்று வாடகை தாய் முறையில் ஒரு குழந்தையை
பெற்றுக் கொண்டு இந்தியாவுக்கு வருகிறார்.
மீண்டும் குழந்தைக் காக அமெரிக்கா சென்று குழந்தை யை பெற்ற
மம்தாபைஜூ
தனது வீட்டுக்கு அழைத்து வருக்கிறார்.
அம்மா தான் உலகம். அம்மா
வின்
அரவணைப்பில் வளர்ந்து மிகப்பெரிய தொழிலதிபரான
சூர்யா, தன் அம்மா ஆசைப்பட்டதற்காக ஒலிம்பிக் போட்டியில் தங்கப்
பதக்கம் வென்று கொடுத்து , திருமணம் மட்டும் செய்துக் கொள்ளக்
கூடாது, என்பதில் உறுதியாக
இருக்கிறார்.
அவரது மனதை மாற்ற அவரது அம்மா ராதிகா
பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் பலன் இல்லாமல்
போக, தனது குடும்பத்திற்கு ஓரு வாரிசு இல்லாமல்
போய் விடகூடாது…! என்று பெரிசா கவலைப்படுகிறார்.
அம்மாவின் கவலையை தீர்ப்பதற்காக ஒரு வாடகைத்தாய்
மூலமாக சூர்யா ஒருகுழந்தையை
பெற்று எடுத்துக்
கொண்டு தனது மார்பில் சுமந்து வீட்டிற்கு வருகிறார்
சூர்யாவின் இந்த நடவடிக்கை பார்த்து அவரது
அம்மாவுக்கு பெரும் அதிர்ச்சியளிக்
கிறது.
கொஞ்சி குளவீ விளையாட ஓரு குழந்தை வேண்டும்
குடும்பத்தின் பெயர் சொல்ல ஒரு குழந்தை
வந்து விட்டது. என்று மகிழ்ச்சியடை
கிறார். தாய்
ஆனால், அந்த மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்ககிற
விதத்தில் குழந்தையின் உயிருக்கு
திடீரென்று ஆபத்து ஏற்படுகின்றன. குழந்தையை ஆபத்தில் இருந்து
காப்பாற்றுவதற்கு ஓரு வாடகைத்தாயை தேடி செல்ல சூர்யா, அது தன்னை விட
இருபது வயது குறைவான மமிதா பைஜு தான் என்று
தெரிகிறது. பார்த்தும் அதிர்ச்சியடை
கிறார்.
குழந்தையின் நிலையை சொல்லி அவரை அழைக்கும் போது, பணத்திற்காக
வாடகைத்தாயாக இருந்த மமிதா பைஜு, அதே பணத்திற்காக
குழந்தையை காப்பாற்ற சூர்யாவுடன் பயணிக்கிறார்.
ஆனால், நாளடைவில் தான் பெற்றெடுத்த குழந்தையுடன்,
அதன் தந்தையான சூர்யாவையும் காதலிக்க தொடங்குகிறார்.
வயது வித்தியாசத்தை காரணம் காட்டி மமிதா பைஜுவின் காதலை
நிராகரித்து விடு
கிறார் சூர்யா, திருமணம் செய்துக் கொள்ளாமல்
இருப்பதற்கான காரணம் என்ன ?, அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார் மமிதா பைஜு
சூர்யாவின் மனதை மாற்றினாரா ?இல்லையா?
என்பதை மேல்நாட்டின் மக்களின் குடும்ப நாடகமாக
சொல்வது தான் விஸ்வநாத் அன்ட் சன்ஸ்” திரைப்படம் கதைக்களம்.
முன்னணி நட்சத்திரங்கள் எப்படிப்பட்ட கதாபாத்திரங்
களில் நடிப்பதால் அதன் மூலம் நாளு பேருக்கு நல்ல அறிவுரை சொல்ல வேண்டும், என்று
என்பதில் பயங்கரமாகவும்
மிக தீவிரமாக இருக்கிறார்கள்.
அப்படி தான் சூர்யாவும், இந்த படத்தில் என்னதான்
மிகப்பெரிய பணக்காரராக இருந்தாலும்,
தான் எளிமையாக இருக்க வேண்டும், பெற்றொரை மதிக்க வேண்டும்,
தன்னை நம்பியிருப்பவர்
களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்,
என்று பல்வேறு அறிவுரைகள் வழங்கியிருக்
கிறார்.
எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை எளிதில் பொருத்திக்
கொள்ளக் கூடிய சூர்யா, சஞ்சு விஸ்வநாத் என்ற தொழிலதிபர் கதாபாத்திரத்தில்
ஸ்டைலிஷாக வலம் வருகிறார். எளியவர்களையும்
அனைவரும் கவரக்கூடிய விதத்தில் நடித்திருக்கிறார்.
தன்னை விட வயது குறைவான பெண்ணின்
காதலை ஏற்க மறுப்பதும் தன்னே திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது.
என்பதில் மிகவும் உறுதியாகவும் மிக கவனமாக இருக்கிறார், அம்மாவின் மிகுந்த பாசத்தை மறைமுகமாக
வெளிப்படுத்துவது, என்று தன் இலகுவான நடிப்பில்
ரசிகர்களை கட்டிப்போட்டு விடு கிறார்.அம்மா இறந்த பிறகு நினைத்து நினைத்து அழுகிற
காட்சியில் அனைவரையும், ஒட்டு மொத்த ரசிகர்களையும்
திரையரங்கை கண்கலங்க வைத்து விடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கிறார். மமிதா பைஜு,
வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில், கதாபாத்திரத்திற்கு ஏற்ப துள்ளல் கண்ணை அடித்து க்கொண்டு மிக ஜாலியான முக பாவனையில் முகம் மற்றும் கதாபாத்திரத்தில்
நடிப்பால் பார்வையாளர்
களின் உள்ளங்களை கவர்கிறார்.
அமெரிக்க பாணியிலான ஆங்கிலத்தையும், தமிழையும் அசால்டாக பேசி
நடித்திருக்கிறார் மமிதா, மகிழ்ச்சி, சோகம், காதல்,
வெட்கம் உள்ளிட்ட மனிதர்களின் அனைத்துவிதமான
உணர்வுகளையும் அழகாகவும், ரசிக்கும்படியும்
திரைக்கதைக்கு பெரும் பலத்தை சேர்த்திருக்கிறார்.
சூர்யாவின் அம்மாவாக நடித்திருக்கிறார். ராதிகாவின் அனுபவம் வாய்ந்த நடிப்பும், தற்போதைய
காலக்கட்டத்திற்கு மேலும் நடிப்பும் காட்சிகளை இயல்பாக நடிப்பில் உதவியிருக்
கின்றன
ரவீனா டாண்டன், சுனில் ரெட்டி, ராஜீவ் மேனன் உள்ளிட்ட மற்ற
கதாபாத்திரங்
களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை படத்திற்கு மிக
பலமாக பயணித்திருக்
கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி காட்சிகளை பிரமாண்டமாக
படமாக்கியிக்கிறார்
படம் மிகப்பெரிய அளவில் தயாரிக்கப்பட்டது. என்பதை காட்சிக்கு காட்சி நிரூபித்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள்
அனைத்தும் பாடலும் மென்மையாக, துள்ளல் ரகமாகவும் மனதை வருடி செல்கின்றது. பின்னணி
இசையை கூட மெலோடியாக கொடுத்து மனதை இதமாக்கியிருக்
கிறார்.ஜி.வி.பி.
மெதுவான திரைக்கதை என்பதால் , பார்வையாளர்
களின் முழு
கவனமும் திரையுடன்
ஒட்டிக்கொள்ளும் வகையில்
காட்சிகளை தொகுத்திருக்
கிறார் நவீன் நூலி
எழுதி இயக்கியிருக்கிறார் வெங்கி அட்லூரி, திருமண உறவை
வெறுக்கும் ஒரு ஆண் பார்வையில் கதை சொன்னாலும், அவர்களின் உண்மையான
பின்னணியை அவர்களது உல்லாச
உலகத்தையும் தைரியமாக சொல்லியிருக்
கிறார். அதை விட
அதிக தைரியம் இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவுக்கு தான்.
எளிமையான கதை, மெதுவான திரைக்கதை, இலகுவான காட்சிகள்
என்றால் , படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்
களின் முழு கவனத்தையும் கட்டிப்போடகிற விதமாக படத்தை
நகர்த்தி செல்லும் இயக்குநர் வெங்கி அட்லூரி, மகனின்
வெளிநாட்டு பயணத்தின் பின்னணி தெரிந்தும், அவரை
கண்டிக்காமல், அதை சாதாரணமாக
எடுத்துக் கொள்ளும் அம்மா மனநிலையை காட்சிப்படுத்திய விதம் நெருடல்.
சர்ச்சையான விஷயங்களை கூட நகைச்சுவையாக கையாண்டு
ஏற்றுக்கொள்ளும்
படி காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருப்பது. திருமண
உறவு வேண்டாம், ஆனால் பெண் உடனான உடலுறவு மட்டும் வேண்டும், என்ற
மனநிலையுடன் பயணிக்கிற நாயகன், தன்
அப்பா போல் இரண்டும் போதாது என்று சுற்றுவது போல் இருக்கின்றன.
ஆனால், இந்த விஷயங்களை மேலோட்டமாகவும், காமெடியாகவும் பேசியிருக்கிறார். இயக்குநர் வெங்கி
அட்லூரி, மக்களுக்கு பல நல்ல விஷயங்களை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
குறிப்பாக கோபமும், வெறுப்பும் ஒருக்கட்டத்திற்கு மேல் சோர்வடைந்து
விடும், சண்டையால் உறவுகள் பிரிவதில்லை, அதன் பிறகு எப்படி பேசுவது என்று
தெரியாமல் தான் பிரிகின்றன. போன்ற வசனங்கள் யோசிக்க வைக்கின்றன.
படம் பார்த்தத்தில், ‘விஸ்வநாத் அன்ட் சன்ஸ்” இந்த திரைப்படத்தை குடும்பத்தில் உள்ளவர்கள் பார்த்து கொண்டாட்ட
வேண்டிய திரைப்
படம். அனைவரும் திரையரங்களில் பார்த்து மகிழவேண்டிய
திரைப்படம்… இதுல திரைக்கதை அம்சம் வித்தியாசமாக சொல்லப் பட்டுள்ளது.ஓரு
நல்ல படம் பார்த்த திருப்தி இருக்கிறது. விஸ்வாநாத் அன்ட்சன்ஸ் கோ.