ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘லவ் பைட்’

‘டாடா’ புகழ் அபர்ணா தாஸ் நாயகியாக நடிக்க, ஆனந்தராஜ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, ‘தாய் கிழவி’ புகழ் முத்துக்குமார், ஆதித்யா கதிர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்

நகைச்சுவை நிரம்பிய சர்வைவல் திரில்லர் ஆக உருவாகும் ‘லவ் பைட், பெரும் வரவேற்பு பெரும் ப்ரோமோ’

LoveBite Promo ▶️ https://youtu.be/tMzHwOWtLuE?si=sWhgalKHTdYGfgVO

முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘கோட்’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 29வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் ‘லவ் பைட்’ திரைப்படத்தை உருவாக்கவுள்ளது.

சந்தானம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ‘டாடா’ புகழ் அபர்ணா தாஸ் நாயகியாக நடிக்க, ஆனந்தராஜ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, ‘தாய் கிழவி’ புகழ் முத்துக்குமார், நிரோஷா, ஆதித்யா கதிர், கல்கி ராஜா, பியூன் சுர்ரோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் முந்தைய படைப்பான ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ திரைப்படத்தை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் ‘லவ் பைட்’ படத்தை இயக்குகிறார்.

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் பார்த்து ரசிக்கக் கூடிய நகைச்சுவை நிரம்பிய சர்வைவல் திரில்லர் ஆக ‘லவ் பைட்’ இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இப்படத்தின் ப்ரோமோ வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசராக அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராக ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கம் பங்காற்றுகின்றனர்.

சுயாதீன இசையமைப்பாளர் ஃபாக்ஸ்ன் (Foxn) இசையமைக்கிறார். எஸ். யுவா ஒளிப்பதிவு செய்ய, வி. சசிகுமார் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, ஆர். சக்தி சரவணன் சண்டைக் காட்சிகளை இயக்க, மீனாட்சி என். ஆடைகளை வடிவமைக்கிறார். கோ-ரைட்டர்: ஷியாம் முரா, காஸ்ட்டியூமர்: சாய்-சிவா எம்., வி எப் எக்ஸ் தலைமை: ஹரிஹரசுதன் (லார்வென் ஸ்டூடியோ), எஸ் எப் எக்ஸ்: சிங்க் சினிமா, மிக்சிங்: தபஸ் நாயக், பப்ளிசிட்டி டிசைனர்: வியாகி, டைட்டில் டிசைன்: வீரா, ஸ்பெஷல் மேக்கப்: ஸ்ரீஜித் குருவாயூர், எஸ். பாண்டியராஜன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன், டிஐ: டி ஸ்டூடியோஸ், கலரிஸ்ட்: கே.எஸ். ராஜசேகரன், தயாரிப்பு நிர்வாகி: எம். செந்தில்குமார்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்க செல்வின் ராஜ் சேவியர் இயக்க சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘லவ் பைட்’ படப்பிடிப்பை விரைந்து முடிக்கும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

By Rajesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *