கிருஷ்ணவதாரம் திரைப்படத்தின் உணர்வுபூர்வமான, மனத்தைக் கவரும் தெய்வீக அன்பின் கீதமான ‘பிரேம் கி லீலா’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது

கிருஷ்ணவதாரம் படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தின் முதல் பாடலான ‘பிரேம் கி லீலா’வை வெளியிட்டுள்ளனர்; உணர்வு மற்றும் கதை என இரண்டிலும் எந்தளவிற்கு அது ஆழமாக கலந்துள்ளது என்பதை குறிக்கும் விதமாக இந்த பாடல் அமைந்துள்ளது. முன்னதாக பகவான் கிருஷ்ணரின் ஜென்மபூமியில் பக்தர்களுடன் இப்படத்தின் முன்னோட்டம் (டிரெய்லர்) பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது, அதனைத் தொடர்ந்து இப்போது அதன் நீட்சியாக இசையும் வெளியிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணாவுடன் ராதா, சத்யபாமா மற்றும் ருக்மிணி ஆகியோர் நடித்துள்ள ‘பிரேம் கி லீலா’ அன்பை ஒரு தனித்த உணர்வாக அல்லாமல், ஒரு பன்முகத்தன்மை வாய்ந்த பரிணமித்து வளரும் ஒரு அனுபவமாக முன்வைக்கிறது. ஒவ்வொரு உறவுக்கும் சொந்தமாக ஒரு குரல் உள்ளது – பக்தி, வலிமை, ஏக்கம் மற்றும் தனித்துவம் ஆகியவற்றை ஒன்றிணைந்து அந்த பந்தங்களின் மேன்மையான மற்றும் மிகவும் நுணுக்கமான வெளிப்பாட்டை உருவாக்குகின்றன.

பிரசாத் சாஷ்டே இசையமைக்க, தும்ரியை ஸ்வராதிஷ் டாக்டர் பரத் பல்வள்ளி இசைக்க, இர்ஷாத் காமில் எழுதிய இந்த பாடலை ஸ்ரேயா கோஷல், ஜாவேத் அலி மற்றும் சுவர்ணா திவாரி ஆகியோர் பாடியுள்ளனர்; இந்த பாடல் ஒரு தெய்வீக அன்பின் வழக்கமான சித்தரிப்புகளைக் கடந்து மேம்பட்ட அனுபவமாக உள்ளது. இது அதன் கதாபாத்திரங்களின் பன்முக உணர்வுகளை தத்ரூபமாக வெளிப்படுத்துகிறது; அதில் காதல் என்பது நெருக்கமானதாகவும், விரிவானதாகவும் உள்ளது, தனிப்பட்ட உணர்வாக இருந்தபோதிலும், அது ஆழமான தத்துவமாகவும் உள்ளது.

இந்த கதையின் மையத்தில் சத்யபாமா உள்ளார், இது கூறப்படும் கதைக்கு ஒரு ஆழத்தையும் சிக்கலையும் சேர்க்கும் கண்ணோடாமாக இருக்கும். அவரது பார்வையில் – காதல் என்பது பக்தியைப் பற்றியது மட்டுமல்ல, அடையாளம், பெருமை மற்றும் உணர்வின் ஆழம் பற்றியதாகவும் இருக்கும்; இது வளமான வரலாற்றில் வேரூன்றிய ஒரு கதையை ஒரு புதிய பரிணாமத்தில் நமக்கு வழங்குகிறது.

காட்சி ரீதியாகவும், இசை ரீதியாகவும் நம்மை அதற்குள் மூழ்கி ரசிக்க வைக்கும் இந்த ‘பிரேம் கி லீலா’ பாடல் இத்திரைப்படத்தின் பிரம்மாண்டத்தைப் பிரதிபலிக்கிறது; இதில் உறவுகள் பல்வேறு நிலைகளைக் கொண்டுள்ளன, மேலும் ஒவ்வொரு உணர்வும் ஒரு பரந்த, மற்றும் சக்திவாய்ந்த கதைக்குப் பங்களிக்கிறது.

ஹர்திக் கஜ்ஜார் இயக்கத்தில் வரும் கிருஷ்ணவதாரம், நம்பிக்கை, வளமான வரலாறு மற்றும் கதை கூறுவது என அனைத்திலும் வேரூன்றிய ஒரு காவியப் படைப்பின் திரைப் பயணமாக கருதப்படுகிறது; இந்த கதை ஒரு தனித்துவமான கண்ணோட்டத்தின் மூலம் வெளிப்படுகிறது. இப்படத்தை கிரியேட்டிவ்லேண்ட் ஸ்டுடியோஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக, சஜன் ராஜ் குரூப் மற்றும் ஷோபா சாந்த் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

இதன் இசை சாரேகமாவில் வெளியிடப்பட்டுள்ளது; மேலும் AA பிலிம்ஸ் உலகளவில் விநியோகக்க ‘கிருஷ்ணவதாரம்’ திரைப்படம் மே 7, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவரும் நிலையில், ‘பிரேம் கி லீலா’ இப்படத்தின் உணர்ச்சிபூர்வமான பின்புலத்தை அதன் தனித்துவத்தின் மூலம் வெளிக்காட்டியுள்ளது. அந்த உலகில் காதல் தனித்த ஒரு உணர்வல்ல, பன்முகத்தன்மை வாய்ந்தது; ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் சொல்லப்படும் கதையை மேலும் சுவாரஸ்மாக நகர்த்தும்.
Link:- https://www.youtube.com/watch?v=fo0TF0IMVWM&list=RDfo0TF0IMVWM&start_radio=1

By Rajesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *