“அறிவான்” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் :- அனந்த் நாக், ஜனனி குணசீலன், பாய்ஸ்
ராஜன், பிர்லா

போஸ், கவுரி சங்கர், குருமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் : – எஸ். அருண் பிரசாத்.
மியூசிக் :-கார்த்திக் எரா.

தயாரிப்பாளர்கள்:- எம்.டி .பிலிம்ஸ் – துரை மகாதேவன்

ஒளிப்பதிவு:-
யஷ்வந்த் பாலாஜி

படத்தொகுப்பு:-
சத்யமூர்த்தி.

நேர்மையான அதே
சமயம் சர்ச்சை
குறிய

இடமாற்றம் செய்யப்படும் போலீஸ்

இன்ஸ்பெக்டராக கதாநாயகன் ஆனந்த் நாக், புதிய காவல் நிலையத்தில்

பொறுப்பேற்று இரண்டு நாட்களில் அப்பகுதியில் ஒரு

சந்தேகத்திற்குரிய மரணம் ஒன்று நடக்கிறது. அது விபத்தா ? அல்லது கொலையா ? என்பதை கண்டறிய

தீவிர விசாரணை மேற்கொள்கிறது, அதற்கு அடுத்த நாள் அதே பகுதியில்

கழுத்து அறுபட்ட நிலையில் ஒரு ஆண் சடலம் கொலை செய்யப்பட்டு இருக் கிறார். இந்த

இரண்டு சம்பவங்களிலும் ஒரு காரில தொடர்புடையதாக

இருக்கிறது இரண்டுமே கொலை தான் என்ற முடிவுக்கு

வரும் ஆனந்த் நாக், தனது விசாரணையை

தீவிரப்படுத்தும் போது, இந்த சம்பவங்களில்

பாலியல் தொழிலாளி

ஒருவருக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறார்.

அந்த பாலியல் தொழிலாளியை காவல்

நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்கிறார்கள். அவர்

கொலையாளி பற்றிய தகவலை சொல்ல முயற்சிக்கும் போது,

அந்த காவல் நிலையத்தில் வைத்தே கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.

வழக்கின் முக்கியமான சாட்சியம் இல்லாமல்

போனதுடன், காவல் நிலையத்தில் கொலை நடந்ததால்

ஆனந்த் நாக்கிற்கு பணி அழுத்தம் ஏற்படுகிறது. அதே

சமயம், அதே பகுதியில் மூன்றவதாக ஒரு கொலை நடக்கிறது. கிடைத்த

சாட்சியத்தை கைவிட்ட நிலையில், குற்றவியல்

நிருபரான கதா நாயகி ஜனனி உதவியுடன் தனது விசாரணையை

மீண்டும் முதலில் இருந்து தொடங்கும் ஆனந்த் நாக்,

கொலையாளியை, தொடர் கொலைகளுக்கான

பின்னணியை, எப்படி அறிகிறார், என்பதை சொல்வது தான் “அறிவான்”.

தொடர் கொலைகள், அதனை காரணங்களையும், கொலையாளியை கண்டுபிடிக்கும் காவல்துறை

அதிகாரியின் விசாரணை என்ற பாணியில் கிரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியிலான

படங்கள் புதியது‌ அல்ல இருப்பினும், அதற்கான

திரைக்கதை மற்றும் கதை சொல்லலை புதிய கோணத்தில்

கையாண்டு பார்வையாளர்கள் கவனத்தை ஈர்க்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் எஸ்.அருண் பிரசாத்.

கதாநாயகனாக நடித்திருக்கிறார் ஆனந்த் நாக்கிற்கு

போலீஸ் வேடத்தில் கனகச்சிதமாக பொறுத்திருக்கிறது அதற்கான கம்பீரமான நடிப்பை

சற்று தடுமாற்றத்துடன்.
நடித்திருக்கிறார். கொலை வழக்கின்

விசாரணையில் கவனம் செலுத்துடன் உடன் இருக்கும் காவலரை

அவ்வபோது கிண்டல் செய்வதை வேலையாக வைத்திருக்கிறார்
கள் அவரது விசாரணை முறை

மற்றும் அதில் அவர் வெளிப்படுத்திய

நடிப்பில், வழக்கின் தீவிரத்தை பலவீனப்படுத்
திருக்கின்றன.

நாயகியாக நடித்திருக்கிறார் ஜனனி குணசீலனின் குற்றவியல் நிருபர்

கதாபாத்திரம் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கும் என்ற

எதிர்பார்ப்பில் ஏற்பட்டதனால கதை நகர்வதில் அவர் காணாமல் போய்

விடுகிறார். பிறகு மீண்டும் அவரை

திரைக்கதையில் இடம்பெற செய்வதற்காக,

வழக்கில் வலுக்கட்டாயமாக பயணிக்க

வைத்திருக்கிறார்
கள். இதனால், அவருக்கு படத்தில்

பெரிய வேலை இல்லை என்றாலும் தனது குறைவான

வேலையை சரியாகவே செய்திருக்கிறார்.

பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கெளரி சங்கர், குருமூர்த்தி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அவ்வபோது

படத்தில் தலை காட்டியிருப்பது

திரைக்கதையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

ஒளிப்பதிவாளர் யஷ்வந்த் பாலாஜியின்

பணியில் தனித்துவம் இல்லை என்றாலும்,

காட்சியமைப்புகளில் தரம் நிறைந்திருக்
கின்றன.

கார்த்திக்.ஈ.ஆர்.ஏ இசையில் பாடல்களும்,

பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர் சத்யமூர்த்தி.ஆர், திரைக்கதை

வேகமாகவும், விறுவிறுப்பாகவும் பயணிக்க கூடுதல்

கவனம் செலுத்தியிருக்
கலாம்.

உண்மை சம்பவம் ஒன்றை பின்னணியாக வைத்துக் கொண்டு, எப்படி ?, எதற்காக ?

யார் ?, ஆகிய மூன்று கேள்விகளை மையமாக கொண்ட

கிரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைக்கதையை எழுதியிருக்கும் இயக்குநர்

எஸ்.அருண் பிரசாத், ஆரம்பத்தில் கதையை பரபரப்புடனும்,

எதிர்பார்ப்புடனும் சொன்னாலும், அடுத்தடுத்த கொலைகளில்

சம்பவங்கள், அதன் விசாரணை மற்றும் அதில் ஏற்படும் திருப்பங்களை,

சாதாரணமாக கையாண்டிருப்பது படத்தை கொஞ்சம் பலவீனப்படுத்து
கின்றன.

கொலையாளி யார் ? என்ற உண்மை தெரிந்த பிறகு,

கொலைகளுக்கு என்ன பின்னணி இருக்கிறது சமூக பிரச்சனை, கொலையாளியை

பிடிப்பதற்கு‌ என்ன முயற்சிகள், கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சிகள் ஆகியவை

பார்வையாளர்களை திருப்தி படுத்துமா
முதல் காட்சியிலேயே

பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்யுமா இயக்குநர் எஸ்.அருண் பிரசாத், தொடர்ந்து கொலை

சம்பவங்கள் மற்றும் அதன் தீவிர விசாரணை அந்த பகுதிகளில், நடிகர்களிடம் வேலை வாங்கிய

விதத்திலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் இந்த ஆண்டின் சிறந்த கிரைம்

சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் இயக்குநராக இருப்பார்.

படம் பார்த்தத்தில், “அறிவான் ” வெற்றி பெறுவான். என்பது நிச்சயம் உறுதி‌

செய்யமுடியவில்லை
ஓரே‌ சஸ்பென்ஸ் இருக்கு
அனைவரும்‌ திரையரங்குகளில் கண்டு களியலாம்…

By Rajesh